டி20 உலகக் கோப்பை அணியில் ரிங்கு சிங், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு… நியூசிலாந்து தொடரில் விளையாடுவார்களா? சூர்யகுமார் விளக்கம்
Ringu Singh Ishan Kishan likely to feature in T20 World Cup squad Will they play in New Zealand series Suryakumar explains
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அக்சர் படேல் மீண்டும் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சுப்மன் கில் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவு என கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பை அணியே நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட உள்ளதால், அந்த தொடரில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பை முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதிரியான பிளேயிங் லெவன் தான் விளையாடும் என்றும், ஆனால் நியூசிலாந்து தொடரில் நேரம் கிடைக்கும் போது ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு நீண்ட பயணத்தையும் வழங்குவோம், தேவையில்லாமல் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யமாட்டோம் என்றும், அணியின் காம்பினேஷன் வலுவாக இருக்கும்படி தான் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Ringu Singh Ishan Kishan likely to feature in T20 World Cup squad Will they play in New Zealand series Suryakumar explains