செயற்கை காலுடன் சாதித்த சுதா சந்திரன் – வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. சுதா சந்திரனின் கண்ணீர் கதை!
Sudha Chandran who achieved success with an artificial leg leaving home and getting married Sudha Chandran tearful story
வாழ்க்கையில் தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை தனது வாழ்க்கையால் நிரூபித்தவர் நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன். 1965 செப்டம்பர் 21ஆம் தேதி சந்திரன்–தங்கம் தம்பதிகளுக்கு மகளாக பிறந்த சுதா சந்திரன், சிறு வயதிலேயே பரதநாட்டியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
ஐந்து வயதிலேயே மும்பையில் உள்ள கலாசதன் நடன அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்ற அவர், பல மேடைகளில் நடனம் ஆடி பாராட்டுகளை பெற்றார். ஆனால் 15 வயதில் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அவரது கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவ காரணங்களால் வெட்டி எடுக்கப்பட்டது.
இதனால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்து மனம் உடைந்த சுதா சந்திரன், பின்னர் செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் தன்னம்பிக்கையுடன் நடன மேடைக்கு திரும்பினார். தனது விடாமுயற்சியால் மீண்டும் பரதநாட்டியத்தில் கலக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு ‘மயூரி’ என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகி, அதில் அவர் தானே கதாநாயகியாக நடித்தார். படம் பல மொழிகளில் வெளியிட்டு வெற்றி பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சினிமாவில் இருந்தபோது உதவி இயக்குநர் ரவியுடன் காதல் ஏற்பட்டு, குடும்ப எதிர்ப்பையும் மீறி 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் வில்லி, அம்மா, மாமியார் போன்ற வலுவான கதாபாத்திரங்களில் நடித்தார். விபத்தில் கால்களை இழந்தபோதும் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறி இன்று வரை பலருக்கும் ஊக்கமாக வாழ்ந்து வரும் சுதா சந்திரன், உண்மையில் வாழ்க்கையை வென்ற ஒரு போராளி என்றே சொல்லலாம்.
English Summary
Sudha Chandran who achieved success with an artificial leg leaving home and getting married Sudha Chandran tearful story