ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த படம் டிராப்? அந்த படம் அவ்வளவு தானா?.. பீதியை கிளப்புறாங்களே!
Did the film starring RJ Balaji fai Is that all They creating panic
சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் மாதத்துக்கு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்திருந்த ஒரு படம் முற்றிலுமாக கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் திடுக்கிடும் செய்திகள் பரவி வருகின்றன.
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கிய ஆர்ஜே பாலாஜி, காமெடி நடிகர், ஹீரோ, இயக்குநர் என படிப்படியாக முன்னேறி தற்போது சூர்யாவை இயக்கும் அளவுக்கு முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார்.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. சூர்யா நடித்த ‘கருப்பு’ படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் தீபாவளி ரிலீஸாக எதிர்பார்த்த நிலையில், டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படாததால் படம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது மார்ச் மாதமே ரிலீஸ் என பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையில், நடிகர் சூர்யா வேங்கி அட்லூரி மற்றும் ஜித்து மாதவன் படங்களை தொடங்கி விட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், 2024 அக்டோபரில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த படம், தயாரிப்பு தரப்பால் கைவிடப்பட்டதாகவும், புதிய தயாரிப்பு நிறுவனம் முன்வந்தால் மட்டுமே படம் மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது. ‘கருப்பு’ தாமதமும், ஹீரோ படத்தின் டிராப் தகவலும் ஆர்ஜே பாலாஜி ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Did the film starring RJ Balaji fai Is that all They creating panic