கேஜிஎஃப் நடிகர் ஹரீஸ் ராய் (காசிம் பாய்) மரணம்!
KGF Actor harish Rai death
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018ல் வெளியான *கேஜிஎஃப்* படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியாகி இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றது. இரு படங்களிலும் “காசிம் பாய்” எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஸ் ராய், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கன்னடத் திரையுலகில் நீண்ட காலமாக பணியாற்றிய ஹரீஸ் ராய், 1995ல் வெளியான சிவராஜ் குமார் நடித்த *ஓம்* படத்தில் “டான் ராய்” என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் பெயர் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் போராடி வந்த அவர், தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று (நவம்பர் 6) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 55.
முன்னதாக தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரீஸ் ராய், “புற்றுநோய் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க தாடியை வளர்த்தேன். யாரும் விதியிலிருந்து தப்ப முடியாது” என்று கூறியிருந்தார்.
அதேபோல் தனது சிகிச்சைச் செலவுகளைப் பற்றியும், “ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய். 63 நாட்களில் மூன்று ஊசிகள் போட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். மொத்தச் செலவு சுமார் 10.5 லட்சம் ஆகும்” என்று நிதி உதவி கோரியிருந்தார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமான ஹரீஸ் ராயின் மறைவு கன்னட திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
English Summary
KGF Actor harish Rai death