சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்வு! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 6) காலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையும் அதே அளவுக்கு மேலும் உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தங்க விலையில் ஏற்ற, இறக்கம் மாறி மாறி ஏற்பட்டது. நவம்பர் 1 அன்று சவரன் தங்கம் ரூ.90,480-க்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை தொடர்ந்து குறைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.90,000-க்கும், புதன்கிழமை ரூ.89,440-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகியது. ஆனால் மாலை வர்த்தக நேரத்தில் விலை மேலும் உயர்ந்தது. தற்போது கிராமுக்கு ரூ.11,320, சவரனுக்கு ரூ.90,560 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.165 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1.65 லட்சமாகவும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு, அமெரிக்க வட்டி விகித நிலை, மத்திய கிழக்கு பிரதேசங்களில் நிலவும் பதட்டம் உள்ளிட்டவை தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் வாங்கும் எண்ணம் அதிகரித்துள்ளதால், விலை தொடர்ந்து உயரும் போக்கு நிலவுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices hike twice today


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->