குடியரசு தலைவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நேரில வாழ்த்து!
Womens World Cup President Murmu
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்து 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. இதன்மூலம் இந்தியா, ஆண்கள் அணிக்குப் பிறகு (1983ல் கபில்தேவ் தலைமையில், 2011ல் டோனி தலைமையில்) மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய நாடாக மாறியுள்ளது.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி, அணியினருடன் நெருக்கமாக உரையாடி அவர்களின் ஆற்றலை பாராட்டினார். இந்தியா முழுவதும் மகளிர் கிரிக்கெட்டுக்கான பெருமையை உயர்த்திய வீராங்கனைகள், உலகக் கோப்பையை பிரதமரிடம் வழங்கி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர், அணி உறுப்பினர்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களை வாழ்த்திய ஜனாதிபதி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது என பாராட்டினார்.
ஜனாதிபதி மாளிகையின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். அணியினரின் கடின உழைப்பும் ஒற்றுமையும் இந்தியாவை உலக தரத்தில் உயர்த்தியுள்ளது. அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களிலும், சமூகப் பின்னணிகளிலும் இருந்தாலும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் இந்தியாவை பிரதிபலிக்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, இந்திய மகளிர் விளையாட்டு வரலாற்றில் மைல் கல்லாக மட்டுமல்லாமல், இளைய தலைமுறைக்கு ஊக்கமூட்டும் நம்பிக்கையின் சின்னமாகவும் மாறியுள்ளது.
English Summary
Womens World Cup President Murmu