ஒகேனக்கலில் திடீர் நீர்வரத்து மாற்றம்! -இன்றைய நிலவரம் என்ன?
Sudden change water flow Okenakkal What situation today
கடந்த சில நாட்களாக, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக, காவிரி கரையோரங்களில் நீர்வரத்து ஏறக்குறைய அலைபாய்ந்து கொண்டிருந்தது.
இதில்,நேற்று மட்டும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு 16,000 கனஅடி தண்ணீர் ஆர்ப்பரித்து வந்தது.ஆனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி, மழை குறைந்ததன் விளைவாக நீர்வரத்து 9,500 கனஅடியாக சற்றே தணிந்தது.

இருந்தாலும், சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளில் வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், ஒகேனக்கல் சுற்றுலாத் தளம் கோலாகலமாக மாறியது.மேலும், சுற்றுலா பயணிகள் பரிசலில் பாய்ந்து காவிரியின் இயற்கை அழகை ரசித்தனர்.
அங்கு தொங்கு பாலத்தில் நின்று பாறைகளின் நடுவே விழும் வெள்ளத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும் மெயின் அருவியில் ஆண்கள் தண்ணீர் விளையாட்டில் ஈடுபட்டனர்; பெண்களும் காவிரியில் குளித்து உற்சாகமாக மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரியின் நீர்வரத்தை தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Sudden change water flow Okenakkal What situation today