ஓபிஎஸ்-ன் கோழைத்தனமான பிழைப்புவாதத்தின் உச்சகட்டம் இது - அதிமுக நிர்வாகி நடிகை கவுதமி விமர்சனம்!
ADMK Gaudhami condemn to ops
அதிமுக நிர்வாகி நடிகை கவுதமி விடுத்துள்ள அறிக்கையில், துரோகம் என்றால் அது திரு. ஓ.பி.எஸ் அவர்கள்!
திரு. ஓ.பி.எஸ் அவர்கள் என்றால் துரோகம்!
துரோகத்தின் முழு உருவமும் தானே என்பதை, மீண்டும் மீண்டும் தனது செயல்களால் உணர்த்திக் கொண்டிருக்கிறார் திரு. ஓபிஎஸ் அவர்கள்!
புரட்சித் தலைவி அம்மா அவர்களை போற்றி, அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்டதை நேற்றுவரை பெருமையாகக் கூறிக் கொண்டிருந்த திரு. ஓபிஎஸ் அவர்கள், இன்று புரட்சித் தலைவி அம்மா அவர்களை புண்படுத்திய, துன்புறுத்திய, அவமதித்த திமுகவில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் மண்டியிட்டு கிடக்கிறார்.
புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய வழியில் நல்லாட்சி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் இருமுறை தமிழ்நாட்டின் முதல்வராக நியமிக்கப்பட்டவர் திரு.ஓபிஎஸ் அவர்கள்.
ஆனால், அரசியல் என்பதே மக்களுக்கு செய்யும் சேவை என்பதையும், தான் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்பதையும் அடியோடு மறந்து, எதிர்க்கட்சியான திமுகவில் இணைகிறார் என்றால், தன்னுடைய பேராசைக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எத்தகைய துரோகத்தையும் செய்வார் இந்த @OfficeOfOPS என்பதை அம்மாவின் தொண்டர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.
தன்னை அடையாளம் காட்டிய புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில், அரசியலில் சாமர்த்தியமான முடிவை எடுப்பதாக நினைத்துக்கொண்டு, தனது சுயமரியாதையை விற்றுவிட்டார் திரு.ஓபிஎஸ் அவர்கள்!
நேற்று வரை திமுகவை “அரசியல் ஆபத்து”, “மக்கள் விரோத சக்தி” என்றெல்லாம் கூறி வந்தவர், இன்று தனது சுயலாபத்திற்காக மக்கள் விரோதிகளுக்கு அடிமையாகிவிட்டார்.
திரு. ஓபிஎஸ் அவர்கள் இன்று எழுதியிருக்கும் துரோக வரலாற்றை தமிழ்நாட்டு மக்களும் வரலாறும் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Gaudhami condemn to ops