ஓபிஎஸ் வரவு.. திமுகவின் தோல்வியை உறுதி செய்தது... தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்! - Seithipunal
Seithipunal


பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ... 

எப்பொழுது... ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. 

தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்....

 மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்கள் அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.... 

இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது...

ஓபிஎஸ் அவர்களின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்... என்று தெரிவித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS ADMK DMK BJP tamil isai comment


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->