பாராக் ஒபாமாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் FBI அதிகாரிகள்: சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கும் AI வீடியோ வெளியிட்ட டிரம்ப்..!
Trump releases AI video of officers arresting and imprisoning Barack Obama
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44-வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 06, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். 20 ஜனவரி 2009 – 20 ஜனவரி 2017 வரை அதிபராக பணியாற்றினார்.
அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , முன்னாள் அதிபர் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்வது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஏ.ஐ வீடியோவில், ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்த போது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. அத ன் பின்னர் ஒபாமா ஆரஞ்சு நிற உடை அணிந்து சிறைச்சாலையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுள்ளன.
2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னதாக அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump releases AI video of officers arresting and imprisoning Barack Obama