தனிநபர் வருமானம்...தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா ? - Seithipunal
Seithipunal


நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் மழைக்கால கூட்ட தொடர்தொடங்கிநடைபெற்றுவருகிறது.அப்போது கூட்டம் தொடங்கியதும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்ககோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேட்டனர் . இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும்.

அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு,  2014-2015-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் இது ரூ.72,805 ஆக இருந்தது. இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன. இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆகும்.இதற்கு அடுத்த இடங்களில் அரியானா ரூ.1,94,285, தெலுங்கானா ரூ.1,87,912, மராட்டியம் ரூ.1,76,678, இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know how many places there are for individual income in Tamil Nadu?


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->