எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை... அதிமுகவில் குடும்ப அரசியல்... செங்கோட்டையன் குற்றச்சாட்டு!
Senkottaiyan say about ADMK Family politics
திமுகவில் குடும்ப அரசியல் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை அதிமுக அடிக்கடி முன்வைத்து வந்தாலும், அதேபோன்று அதிமுகவிலும் குடும்ப அரசியல் வேரூன்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று காலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் அதிமுகவிலும் அதே நிலையே உள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை ஆகியோரின் தலையீடுகள் கட்சியில் வெளிப்படையாக தெரிகிறது,” என்று கூறினார்.
மேலும், “ஒருவரால் முடியாததை, தன்னால் முடியும் என்று சொல்லி தன்னை ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றக் கூடாது” எனக் குறிப்பிட்டு, தற்போதைய தலைமையை நேரடியாக விமர்சித்தார்.
செங்கோட்டையன் சமீபத்தில் பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தியிருந்தார். இதனை கட்சி விதிமீறலாகக் கருதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நான் எதையும் தவறாகச் செய்யவில்லை; என் மனசாட்சிக்கு விரோதமான எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை” என்று விளக்கமளித்திருந்தார்.
English Summary
Senkottaiyan say about ADMK Family politics