சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு: நேபாளத்தில் நடந்தது தெரியுமா..? மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம்..!
Supreme Court cites Nepal in case seeking ban on viewing pornographic images on social media
சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளம் சிறார்கள் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்க்க, தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு இன்று ( நவம்பர் 03) தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வருண் தாக்கூர்; 'கோவிட் காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாகச் செயல்பட்டது. அப்போது முதல் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

செல்போன் செயலிகளில் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த எந்தவிதமான வழிமுறையும் இல்லை. இந்தச் சிக்கலைச் சமாளிக்க எந்தவொரு சட்டமும் இல்லை. குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்டோரை ஆபாச வீடியோக்கள் கடுமையாகப் பாதிக்கின்றன' என வாதிட்டார்.
இதனையடுத்து, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்த்துள்ளது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: நேபாளத்தில் சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய ஒரு முயற்சி நடந்தது. நேபாளத்தில் என்ன நடந்தது என்பது தெரியுமல்லவா..?

அதன் விளைவு என்னவென்று நீங்கள் பார்த்தீர்கள். இது தொடர்பாக பாராளுமன்றம் மற்றும் அரசு தான் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், எனவே, நீங்கள் அவர்களிடம் தான் கோரிக்கை வைப்பது சரியாக இருக்கும். இதை எங்களால் ஏற்க முடியாது. என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நமது அண்டைய நாடான நேபாளத்தில் திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டு அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வாறு இளைஞர்கள் போராட்டத்தால் நேபாள அரசு கவிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Supreme Court cites Nepal in case seeking ban on viewing pornographic images on social media