சிறுமியை கடத்தி, சென்று நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி பயிற்சியாளர்!
Hockey coach kidnapped gang-raped with friends
சாலையில் சென்றுகொண்டுருந்த 15 வயது சிறுமி கடத்தி சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்வபம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து செல்கிறது. சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல் பெரிய பெண்கள் வரை அவர்களுக்கு பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது. சட்டங்கள் கடுமையான தண்டனை வழங்கினாலும் ஒரு சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது .
இந்தநிலையில் ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.ஜூலை 3 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவத்தன்று , சர்தக் என்ற ஹாக்கி பயிற்சியாளர், சந்தீப் மற்றும் சாகர் ஆகிய தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறுமியை கடத்திச் சென்று, ஒரு விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது . கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமி சர்தக் பணியாற்றும் ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஒடிசாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுமி தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Hockey coach kidnapped gang-raped with friends