நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகள் போராட்டம்!
Parliament Monsoon Session Opposition Parties Protest
ராகுல் காந்தி பேச அனுமதி வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மகர் துவார் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலையில் தொடர்கிறது. ராகுல் காந்தி பேச அனுமதி வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மகர் துவார் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு அமளிகளை ஏற்படுத்தி வந்ததால், இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று இரு அவைகளும் கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.தற்போது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா அறிவிப்பு அரசியல் சூடுபிடிக்கக் காரணமாக அமைந்தது.

மேலும்பீகாரில்வாக்காளர்பட்டியல்மறுஆய்வு(SIR)குறித்துஎதிர்க்கட்சிகள்கோஷமிட்டனர்.வெளிப்படையான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்காக வாக்காளர் பட்டியல் சரியாக திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.ராகுல் காந்தியின் உரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்களான கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர் .
English Summary
Parliament Monsoon Session Opposition Parties Protest