மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2006-இல் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

கடந்த ஜூலை 11, 2006 அன்று மும்பையின் மேற்கு ரயில்வே உள்ளூர் பாதையில் 07 குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது. அதில் பலர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 05 குற்றவாளிகளுக்கு (ஒருவர் உயிரிழப்பு) துாக்கு தண்டனையும், 07 பேருக்கு ஆயுள் தண்டனையும் விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பான அப்பீல் வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்,  விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நேற்று ரத்து செய்துள்ளதோடு, குற்றவாளிகளை விடுவித்தும் உத்தரவிட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஹராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படை பிரிவு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை வரும் 24-ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கவுள்ளது.

மஹாராஷ்டிர ஏ.டி.எஸ். சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விஷயத்தின் அவசரத்தைக் காரணம் காட்டி, அவசர விசாரணையை கோரியதைத் தொடர்ந்து வழக்கு பட்டியல் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Anti Terrorism Squad files appeal in Supreme Court against acquittal of Mumbai train blast convicts


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->