அகல்யம்' உடன் ஆடி பெருக்கை கொண்டாடுங்கள்..தனிஷ்க்கின் புதிய நகைத் தொகுப்பு அறிமுகம்!
Celebrate the abundant harvest with Aghalyam Launch of Tanishqs new jewelry collection
தனிஷ்க்கின் 'புதுமை பெண்’ பெரும் பாரம்பரியத்தையும் ஆத்மார்த்தமான உணர்வையும் கொண்டாடும் வகையில் கெளரவிக்கிறது.
சென்னை, 21 ஜூலை 2025: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க், அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடி பெருக்குப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் ‘அகல்யம்’ என்ற புதிய ஆபரணத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘
ஒளியையும், பெரும் ஆற்றலையும் தரும் ‘விளக்கு’ மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு ’அகல்யம்’ நகைத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பாரம்பரியத்தில் பல தலைமுறைகளாக புனிதமான ஒன்றாக வேரூன்றியிருக்கும் ’தீபம்’, ஒளி, ஞானம் மற்றும் தெய்வீகம் ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளமாக இருந்து வருகிறது.
இந்தத் தொகுப்பு இந்தப் புனிதமானவற்றையும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகளையும் கெளரவிக்கும் வகையில் ‘அகல்யம்’ அறிமுகமாகியுள்ளது. இன்றைய ‘புதுமைப்பெண்’ணுக்காகவே பிரத்தியேக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நகைத்தொகுப்பு, பாரம்பரியத்தில் அவளுக்கென இருக்கும் பெருமையையும், வாழ்வின் முன்னேற்றத்தில் அவள் காட்டும் உத்வேகத்தையும் பிரதிபலிக்கிறது. மரபுகளில் அவள் வேரூன்றியிருந்தாலும் மாறி வரும் நவீன உலகில், அவளின் வசீகரத்தையும்,
தைரியத்தையும் இந்த பிரச்சாரம் வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், மரபுகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் அவளது குணமும், மாற்றங்களை முன்னெடுக்கும் அவளது ஆளுமையையும் இந்த நகைத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு ஆபரணமும் வெளிப்படுத்துகின்றன.
English Summary
Celebrate the abundant harvest with Aghalyam Launch of Tanishqs new jewelry collection