ஒரு தலைக்காதலால் விபரீதம்: மாணவியை கத்திமுனையில் சிறைபிடித்து மிரட்டிய வாலிபர்: அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்..!
A young man who held a student captive at knifepoint and threatened her with a headbutt
மஹாராஷ்டிராவில் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி போது அக்கம் பக்கத்தினர் அவருக்கு தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டுள்ள சம்வபம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் பசப்பா பீத் கரன்ஜே பகுதியில், மாணவி ஒருவரை குறித்த வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞர், நேற்று மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில், அந்த மாணவியை கத்தி முனையில் சிறைபிடித்து,கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். அப்போது தன்னை விடும்படி அந்த மாணவி கெஞ்சியதை கூட பொறுப்படுத்தது அந்த வாலிபன் மிரட்டியுள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி, மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அருகில் வரக்கூடது என அந்த வாலிபர் மிரட்டியுள்ளார். ஆனால், வாலிபருக்கு பின்னால் இருந்த மதில் சுவர் மீது ஏறி குதித்து ஒரு இளைஞர் கத்தி முனையில் மிரட்டிய வாலிபரை தாக்கியுள்ளார்.
அதன் பின்னர், அங்கிருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டுள்ளனர். அத்துடன், அந்த இளைஞருக்கு அடி,உதை கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, இந்த பகுதிகளில், போலீஸ் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A young man who held a student captive at knifepoint and threatened her with a headbutt