'அரசியல் ரீதியாக இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கலாம். ஆனால், நடிகராக குறைவுதான்': பவன் கல்யாண் ஓபன் டாக்..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள  'ஹரிஹர வீரமல்லு' திரைப்படம் வரும் ஜுலை 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தை க்ரிஷ் ஜாகர்லமுடி திரைக்கதையில் அவருடன் இணைந்து ஏ.எம். ஜோதி கிருஷ்ணாவும் இயக்கியுள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இன்று மாலை வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்  பவன் கல்யாண், தனது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

அதாவது, “அரசியல் ரீதியாக நான் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கலாம். ஆனால், நடிகராக எனது பிரபலம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்ற நடிகர்களை விடவும் குறைவுதான். எனது படங்களின் வியாபாரம் ஒப்பீட்டில் குறைவாகவே இருக்கும். அதனால்தான் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று யோசித்து இங்கு வந்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்து வெளியாகிறதாகவும்,  இரண்டு கோவிட் காலகட்டத்தை  கடந்த நிலையில், சாதி, மதம் பார்க்காமல் இந்தத் திரையுலகம் பலருக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்று பேசியுள்ளார். மேலும், திறமை உள்ள யாரும் வளரலாம். அதனால் தான் சினிமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pawan Kalyan says he is politically popular across India but not as popular as an actor


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->