பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்..!
Central government approves debate in Parliament on Pahalgam attack and Operation Sindhu
பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆனால், அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க கோரி, முழக்கமிட்டு அவையில் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவர்கள் இடையூறு செய்து கொண்டே இருந்ததால் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து லோக்சபாவில் 16 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்காலக் கூட்டத்தொடரில் 21 அமர்வுகள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் அவையில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இந்த விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இந்த வாரம் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தப்படும் போது பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதால் அடுத்த வாரம் விவாதம் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
Central government approves debate in Parliament on Pahalgam attack and Operation Sindhu