ஆரம்பாக்கம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளி குறித்து தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும்: போலீஸ் அறிவிப்பு..!
Police announce reward of Rs 5 lakh for information on sexual assault of minor girl
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக போலீஸ் அறிவித்துள்ளது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 08 வயது சிறுமி சிறுமியை மர்ம ஒருவர் பின் தொடர்ந்து சென்று கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறித்த நபர் பற்றிய எந்த தகவலும் இது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், சிசிடிவி கேமிராவில் பதிவான குற்றவாளியின் தெளிவான படத்தை தமிழக போலீஸ் வெளியிட்டு, அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-w4p94.png)
இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியுள்ள நிலையில், குற்றவாளி பிடிபடவில்லை. இதனால், அவனை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று தமிழக போலீஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தமிழக போலீஸ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
English Summary
Police announce reward of Rs 5 lakh for information on sexual assault of minor girl