நூதன முறையில் வீடு கட்ட முயற்சி...காவல்நிலையத்துக்கு பறந்த  இட உரிமையாளர்..விழுப்புரத்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நூதன முறையில் வீடு கட்ட முயற்சி  செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்நிலையத்துக்கு   இட உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி இவர் அரிசி மண்டி வைத்து மொத்த வியாபாரம்  செய்து வருவது வழக்கம் இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் முத்துலட்சுமி கணவர் பெயர் பாக்கியராஜ்.

 இவர்கள்  செஞ்சி நரசிங்கராயன் பேட்டை சேர்ந்த முத்து மகன் ஏழுமலை இவருக்கு சொந்தமான புஞ்சை நிலம் சர்வே எண் 8/18B, என்ற எண்ணில் 36 சென்ட் அவர்களிடம் இருந்து கடந்த மாதம் எட்டாம் தேதி கிரயம் பெற்றார் இந்த நிலையில் கிரையம் பெற்ற நிலத்தில் நேரில் சென்று பார்த்து விடலாம் என்று 12-07-2025 தேதி காலை கிரயம் பெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக சென்றபோது இவர்களிடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தனபால், மகன் கமலக்கண்ணன், சரண்ராஜ், மற்றும்  உறவினர்  நான்கு பேருடன் வந்து வழிமறித்து எப்படி நீ இந்த இடத்தில் கடக்கால் போட்டு வீடு கட்டுகிறாய் என்று நான் பார்த்து விடுகிறேன் தகாத வார்த்தையால் பேசி நான் இந்த இடத்தில் வீடு கட்டுகிறேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று மிரட்டல் விடுத்தார்.

 இந்த சம்பவம் குறித்து அதிர்ந்து போன கண்ணன் மகன் முனுசாமி அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் செஞ்சி காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர் இது சம்பந்தமாக செஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attempting to construct a house in a modern wayThe landowner flew to the police station Excitement in Villupuram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->