துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா: பிரதமருக்கும், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு..!
Vice President Jagdeep Dhankhar Resigns
துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் திடீரென அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மருத்துவர்களின் அறிவுரையின் படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன் என்றும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்து கொண்ட நல்லுறவுக்கும் நன்றி என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றது என்றும், அவருடன் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Vice President Jagdeep Dhankhar Resigns