தேர்வு பேப்பர் லீக் செய்த வழக்கு: முன்னாள் ரெயில்வே ஊழியர்களுக்கு 5 வருடம் சிறை மற்றும் அபராதம்: 23 ஆண்டுகளுக்கு பின் தண்டனை..! - Seithipunal
Seithipunal


கடந்த 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி, ரெயில்வே துறையில் துணை ஸ்டேசன் மாஸ்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்போது அகமதாபாத், வதோதரா, ஆனந்த் ஆகிய இடங்களில் வேலைப் பார்த்து வந்த 08 அதிகாரிகள் மற்றும் தனி நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 01 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தேர்வு பேப்பரை லீக் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

இது குறித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு இன்று நீதிமன்றம் 05 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 05 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டவர்களில் தனி தனி நபர் விசாரணை காலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த தேர்வு பேப்பர் லீக் வழங்கில் 23 வருடத்திற்குப் பிறகு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former railway employees sentenced to 5 years in prison and fined after 23 years in exam paper leak case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->