மக்கள் குறைதீர்நாள் கூட்டம்..பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தமிழகஅரசின்உத்தரவின் பேரில் வாரம் தோறும்  பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம், இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி ஐஏஎஸ்  பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

   ஈரோடு,வேலைவாய்ப்பு குறித்து மனு ,கணவனால் கைவிடப்பட்டோர் ,ஆதரவு அற்றோர் ஆகியோர் உதவித்தொகைக்காக பெறப்பட்ட மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு ,வாரிசு சான்றிதழ் கேட்டு மனு தொழில் கடன் சாலை வசதி அடிப்படை வசதி மேம்படுத்த மனு குடிநீர் வசதி மாற்று திறனாளிகள் கோரிக்கை மனு என மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 415 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடன் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

 மேலும்  தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அமைச்சர் பெருமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது..   நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை அரசு போக்குவரத்து நகரை சேர்ந்த நீரில் மூழ்கி இருந்த டேவிட் ராஜ் அவர்களின் மனைவி தவசி அம்மாள் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் இன் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவியாக ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு தலா ரூ6700 வீதம் ரூ 33 500 மதிப்பீட்டிலான விலை இல்லா சலவை பெட்டிகளையும் சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 10 நபர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் என மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ 1,33,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வணங்கினார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார்,உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி காஞ்சன் செளத்ரி ஐஏஎஸ் மாவட்ட வளங்கள் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜகான்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி,உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public grievance redressal meeting The district collector has instructed to provide immediate solutions to the petitions received from the public


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->