பட்டா இடங்களை வாங்கி வீடு கட்டியவர்கள் பெயரை மாற்றமுடியாமல் அவதி..ஓம்சக்தி சேகர் வேதனை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பட்டா இடங்களை வாங்கி வீடு கட்டியவர்கள் அந்த இடத்தை அவரது பெயரில் அந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் பல ஆண்டுகளாக சிரமப்படும் நிலை உள்ளதாக அதிமுக உரிமை மீட்பு குழுமாநில செயலாளர்  ஓம்சக்தி சேகர்  கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு செய்து வருகிறது. 

அதில் ஒன்றாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்ததைப் போல அங்கீகாரம் பெறாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மேற்பட்ட கட்டிடங்கள் இதன் வாயிலாக வரைமுறைப்படுத்தப்பட உள்ளது பாராட்டுதலுக்குரியது. 

கட்டிட அனுமதி இல்லாததால் சாதாரண மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வங்கி கடன் பெறும்போது அப்ரூவல் இல்லாததால் உரிய வங்கி கடன் பெற முடியாத நிலை நீடித்து வந்தது. இந்த பிரச்சனை தீர்க்க தற்போது  முதல்வர் அனுமதி பெறாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தி தற்போது அந்த கட்டிடங்களுக்கு விடிவு காலம் கிடைத்துள்ளது.

இதே போல புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பட்டா இடங்களை வாங்கி வீடு கட்டியவர்கள் அந்த இடத்தை அவரது பெயரில் அந்த இடத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் பல ஆண்டுகளாக சிரமப்படும் நிலை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் நிலவி வருகிறது.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, குடிசை மாற்று வாரியம்,ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் வழங்கப்பட்ட இடங்களை வாங்கி அந்த இடத்தில் சிறிய வீடுகள், கட்டி தற்போது வசித்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டு வரி கூட தற்போது வசூலிக்கப்படுகிறது. 

ஆனால் அவர்கள் பெயரிலேயே பட்டா அல்லது பத்திரம் மாற்றி கொடுக்கப்படாமல் இன்று வரை ஒருவித அச்ச உணர்விலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எனது நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி நகர், பெரியார் நகர், உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற பிரச்சனை நிலவி வருகிறது.நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்திலும் தற்போதைய முதல்வர் அவர்களிடமும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். 

அப்போதெல்லாம் முதல்வர் அவர்கள் தனது தொகுதியில் கூட இது போன்ற பிரச்சனை உள்ளது. 
விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளார். 

அனுமதி பெறாத கட்டடங்களை 1987 ஆம் ஆண்டு மையப்படுத்தி அனுமதி வழங்கியது போல. இதுபோன்று அரசு துறைகள் வழங்கிய பட்டா நிலங்களை தற்போது அதனை வாங்கி அதே இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கும் குறைந்த விலையில் ஒரு முறை வாய்ப்பு வழங்கி முதல்வர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

குறைந்தபட்சம் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 1000 ஆயிரம் குடும்பமாவது இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 

புதுச்சேரி மாநிலத்தில் ஏழை எளிய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கனவுகளை நிறைவேற்றி வரும் புதுச்சேரி முதல்வர் அவர்கள். பட்டா இடங்களை வாங்கி அங்கேயே வசித்து வரும் மக்களுக்கும் உரிய வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என  அதிமுக உரிமை மீட்பு குழுமாநில செயலாளர்  ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who bought land and built houses are suffering as they cannot change their names Omsakthi Sekhars distress


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->