பேருந்து கட்டணம் தமிழகத்தில் உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்த சிவசங்கர் - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் ''எஸ்.எஸ்.சிவசங்கர்'' செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததில் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம்.

பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தற்போதைக்கு இல்லை.இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், பேருந்து கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்ற நிலையில் போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே பேருந்து கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு. எனவே தி.மு.க.வின் வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய கட்சிகளை பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் களத்தில் இறக்குவது வழக்கம்.

இப்பொழுதும் அந்த தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளது. அனைத்தையும் முறியடித்து முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வெற்றி பெறும்.எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும்.

2036 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி அமைதியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது ஒன்றை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivashankar clarified question whether bus fares increased in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->