பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் மீது பலாத்கார குற்றச்சாட்டு – இளம்பெண் பேட்டியால்  பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் அவுராத் தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரபு சவான் மகன் பிரதீக் சவான் மீது பலாத்காரம் செய்ததாக மராட்டியத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதீக் சவான் மற்றும் அந்த இளம்பெண் இடையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தனர். அந்த நேரத்தில், “திருமணம் செய்து கொள்வேன்” என்ற வாக்குறுதி அளித்து, பிரதீக் சவான் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், தற்போது பிரதீக் சவான் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட இளம்பெண் மகளிர் ஆணையத்தின் வழியாக அவுராத் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பீதரில் செய்தியாளர்களை சந்தித்த அந்த இளம்பெண்,“பிரபு சவான் என்மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. சமூக வலைதளம் வழியாக பிரதீக் சவானை சந்தித்தேன். பெற்றோர் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். திருமணம் செய்வேன் என்ற நம்பிக்கையுடன் அவருடன் சென்றேன். அவர் பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது உண்மை. நான் பொய்யாக கூறவில்லை. ஆனால் தற்போது அவர் திருமணத்துக்கு மறுக்கிறார். நான் நீதியை நாடுகிறேன்.”
என்று கூறியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் திருமணம் செய்து வைப்பதாக கூறினார். ஆனால் இப்போது ஏமாற்றிவிட்டார். எனவே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் கர்நாடகாவில் அரசியல் சூடுபிடிக்கக் காரணமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLAs son accused of rape uproar due to young womans statement


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->