இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
Deputy Chief Minister Udhayanidhi Stalin presented awards to Indias leading hockey players and athletes
புதுடெல்லியில் ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெற்ற காட்சிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னணி ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழாவினையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியில், இந்திய ஹாக்கி அணி பல்வேறு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்களை பார்வையிட்டு, ஹாக்கி இந்தியா நிர்வாகிகளுடன் உதயநிதி கலந்துரையாடினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பை, அதன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காட்சிப் படுத்தப்பட்டது.
இது குறித்து துணை முதல்வர் கூறுகையில்,' புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், அங்கு வரவிருக்கும் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைக்கான கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹாக்கியின் வளர்ச்சிக்கு தமிழக அரசின் பங்களிப்பை நான் எடுத்துரைத்தேன், மேலும் இந்தியா உலகின் முன்னணி ஹாக்கி வீராங்கனையாக இருக்க தொடர்ந்து முயற்சித்து வரும் ஹாக்கி இந்தியாவை வாழ்த்தினேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Deputy Chief Minister Udhayanidhi Stalin presented awards to Indias leading hockey players and athletes