'இந்தியாவின் தலைமையின் சாராம்சம் அதிகாரத்திலோ, செல்வத்திலோ இல்லை; இரக்கம் மற்றும் பிறரைக் கவனித்துக் கொள்ளும் திறனில் உள்ளது: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு..!
RSS chief Mohan Bhagwat says the essence of Indias leadership lies in compassion and the ability to care for others
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது: சமூகம் சட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவதில்லை. சமூகம், உணர்திறன் அடிப்படையில் இயங்குகிறது. சொந்தம் என்ற உணர்வு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தச் சொந்தம் என்ற உணர்வு நம் அனைவரின் அடிப்படை இயல்பு என்றும், அனைத்து மக்களிடமும் உள்ளது, இது நமது பாரம்பரியம் ஆகும். இதை இன்று அறிவியலும் ஒப்புக்கொள்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவின் தலைமையின் சாராம்சம் அதிகாரத்திலோ அல்லது செல்வத்திலோ இல்லை என்றும், மாறாக இரக்கம் மற்றும் பிறரைக் கவனித்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றில் உள்ளது என்று பேசியுள்ளார். அத்துடன், இந்தியா தனக்குள்ளும் மற்றவர்களிடமும் மனிதநேய உணர்வை மீண்டும் தூண்டு ம்போதுதான், உண்மையிலேயே ஒரு விஸ்வகுருவாக மாற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மோகன் பகவத் தெரிவிக்கையில், நாம் உலக குருவாக மாற விரும்பினால், முதலில் அவர்களிடம் இருப்பதைப் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவர்களிடம் இல்லாததை நம்மிடம் வைத்திருப்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இன்றைய உலகம் லாப நஷ்டங்களை மட்டுமே பார்க்கிறதாகவும், நாம் கணக்குப் பதிவைத் தொடங்கினால், தன்னார்வ வேலைகள் கூட நடக்காது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
English Summary
RSS chief Mohan Bhagwat says the essence of Indias leadership lies in compassion and the ability to care for others