“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் ப்ரோ!” – யெஷஸ்வி ஜெய்ஸ்வால் காதல் வதந்திக்கு விளக்கம் கொடுத்த மிருணாள் தாகூர் - Seithipunal
Seithipunal


மராத்தி மற்றும் இந்தி படங்களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மிருணாள் தாகூர், தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். துல்கர் சல்மானுடன் அவர் நடித்த இந்தப் படம் 2022ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து மிருணாளுக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது இந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அவரது மார்க்கெட் தொடர்ந்து வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மிருணாள் தாகூரை சுற்றி அவ்வப்போது காதல் வதந்திகளும் பரவி வருகின்றன. முன்னதாக நடிகர் தனுஷுடன் அவர் காதலில் இருப்பதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மிருணாள் திட்டவட்டமாக மறுத்திருந்தார். தனுஷுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அவருடன் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் மிருணாள் தாகூர் நெருக்கமாக இருப்பதாக புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. மும்பையில் உள்ள ஒரு கஃபேவில் இருவரும் ஒன்றாக இருந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இந்த வதந்திகளுக்கு தற்போது மிருணாள் தாகூர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள் ப்ரோ. நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? படித்தவர்களாக இருப்பவர்களே வதந்திகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள். நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. ஜென் ஸியிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். சரியான பிரச்சனைகள் குறித்து வீடியோக்களை உருவாக்கினாலே அதிகமான வியூஸ்கள் கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் யெஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதல் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மிருணாள் தாகூர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் பிரபலங்களைப் பற்றிய வதந்திகளை பரப்புவதையும் விமர்சித்துள்ளார். அவரது இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mrunal Thakur clarifies rumors about a romance with Yashasvi Jaiswal


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->