ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் 44 இந்தியர்கள்: விரைந்து மீட்ட நடவடிக்கை; வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்..!
Ministry of External Affairs informs that steps have been taken to urgently rescue 44 Indians serving in the Russian army
உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிவரும் 44 இந்தியர்ககளை விரைவில் விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை அப்பணியில் இருந்து விடுவிக்கவும், இந்த நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும் என ரஷ்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் என்றும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ரஷ்ய ராணுவத்தில் தற்போது 44 பேர் பணியாற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்களின் நிலைப்பற்றி சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறதாகவும், அவர்களை மீட்பதற்காக ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர் என்றும், அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக ரன்திர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்படி பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, வெளிநாட்டில் வேலை எனக்கூறுவோரிடம் கவனமாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது அதனை கவனத்தில் கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ministry of External Affairs informs that steps have been taken to urgently rescue 44 Indians serving in the Russian army