காவல் ஆணையரிடம் பிரபல பாடகி சின்மயி பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா, சமூக வலைதளங்களில் தன்னையும் குழந்தைகளையும் குறிவைத்து வெளியாகும் அவதூறு மற்றும் மிரட்டல் பதிவுகள் தொடர்பாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரிடம் புகார் அளித்துள்ளார்.

சின்மயி கூறியதாவது, எக்ஸ் தளத்தில் சிலர் தொடர்ச்சியாக தன்னை அவமானப்படுத்தியும், தனது குழந்தைகளுக்கு தீங்கு வேண்டியும் பதிவுகள் செய்து வருவதால் மனஅழுத்தம் அதிகரித்து வருவதாகும். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், “ஒவ்வொரு நாளும் வரும் இந்தக் கேவலமான தாக்குதல்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்கின்றன. யாருக்காவது என் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை புறக்கணிக்கலாம். ஆனால் என் குழந்தைகள் இறக்கவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விஷமான பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனை 15 ஆண்டுகளாக நீடித்தாலும், நான் மீண்டும் மீண்டும் புகாரளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தயவுசெய்து நடவடிக்கை எடுக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது புகாரை கவனத்தில் எடுத்த ஹைதராபாத் காவல் ஆணையர், உடனடியாக சைபர் குற்றப்பிரிவுக்கு விசாரணை உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் சின்மயிக்கு பதிலளித்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

singer Chinmayi complaint Hyderabad Police Commissioner social media issue


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->