நற்செய்தி! ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள், பட்டுப் புடவைகள்...! -தேர்தல் வாக்குறுதி சொன்ன இபிஎஸ்
Quality houses and silk sarees for poor weavers EPS election promise
தஞ்சை கும்பகோணத்தில் நெசவு தொழிலாளர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' பங்கேற்று உரையாடினார்.

அப்போது கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியிடம் நெசவு தொழிலாளர்கள் தங்களின் கவலை தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி:
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது," அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின் ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.
அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும்" என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
English Summary
Quality houses and silk sarees for poor weavers EPS election promise