முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல் இன்று பிற்பகலில் அரசு மரியாதையுடன் தகனம்! - Seithipunal
Seithipunal


கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடல் இன்று பிற்பகலில் அரசு மரியாதையுடன் அவரது உடல் ஆலப்புழை வலிய சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்..  101 வயதான அவருக்கு கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.2019-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு

 சிறுநீரக பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று முன்தினம் பிற்பகல் 3.20 மணிக்கு மரணம் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று  காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு  அவரது உடல் ஆலப்புழை எடுத்து செல்லப்பட்டது 

இந்தநிலையில் இன்று புதன்கிழமை காலையில் ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிற்பகலில் அரசு மரியாதையுடன் அவரது உடல் ஆலப்புழை வலிய சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்,  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதனிடையே வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் நேற்று  பொது விடுமுறை அளிக்கப்பட்டு 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Chief Minister Achuthanandans body will be cremated with state honors this afternoon


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->