சிபிஎஸ்இ உத்தரவு: பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்!
CBSE directive Surveillance cameras are mandatory in schools
பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்சு குப்தா அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:பள்ளி வளாகத்தில் முழுமையான பாதுகாப்பு சூழல் அவசியம்.நுழைவு வாயில்கள், வெளியேறும் இடங்கள், பாதைகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், ஆய்வகங்கள், கேண்டீன், ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து பொது இடங்களிலும் (கழிவறைகள் தவிர) ஆடியோ பதிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும்.
கேமரா சாதனங்களில் குறைந்தது 15 நாட்கள் காட்சிப் பதிவுகளை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும்.இந்த உத்தரவை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
CBSE directive Surveillance cameras are mandatory in schools