தமிழகத்தை போலவே கேரளாவிலும் மகளிர் ரூ.1000 உதவித்தொகைத் திட்டம்! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் பினராயி விஜயன் பல புதிய மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மாதாந்திர பெண்கள் உதவித் திட்டத்தைப் போன்று, கேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அரசின் எந்த திட்டத்திலும் இதுவரை பயனாளிகளாக இல்லாத 35 முதல் 60 வயதுக்குள் உள்ள 31.34 லட்சம் பெண்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். இதற்காக மாநில அரசு வருடத்திற்கு ரூ.3800 கோடி ஒதுக்கியுள்ளது.

அதே நேரத்தில், கல்வி முடித்து வேலை வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்காகவும் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்த பிறகு, திறன் மேம்பாட்டு பயிற்சி அல்லது போட்டித் தேர்வு தயாரிப்பில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 30 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இதன் மூலம் சுமார் 5 லட்சம் இளைஞர்கள் நேரடி பலனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN SCST Commission taken Suo moto action against ADMK Kovai Sathyan


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->