எனது உடம்பு அப்படி ஆனதுக்கு காரணம் தேவயானி கணவர்தான்! விக்ரமன் ஓபன் டாக்.. குருநாதரே இப்படி சொல்லிட்டாரே!
Devayani husband is the reason why my body is like this Vikraman Open Talk Gurunath himself said this
நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ராஜகுமாரன், திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியவர் என்றே அனைவருக்கும் தெரியும். இடையிடையே சில படங்களில் நடித்தாலும், அந்த முயற்சிகளும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதே நேரத்தில் தேவயானி தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீப காலமாக ராஜகுமாரன் வழங்கி வரும் பேட்டிகள் பல விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளன. குறிப்பாக இயக்குநர் மகேந்திரன், நடிகர் கமல்ஹாசன் குறித்து கூறிய கருத்துகள் பெரிய அளவில் ட்ரோலை சந்தித்தன. தேவயானியின் பெயருக்கு தேவையற்ற எதிர்மறை தாக்கம் ஏற்படுத்துகிறார் என ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்தாலும், அந்த விவகாரத்தில் தேவயானி எந்த பதிலும் வழங்கவில்லை.
இந்நிலையில், ராஜகுமாரனின் குருநாதரும் பிரபல இயக்குநருமான விக்ரமன், அவரைப் பற்றிய ஒரு சுவையான அனுபவத்தை பகிர்ந்து பேசியது தற்போது வைரலாகியுள்ளது.
ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விக்ரமன் கூறியதாவது:“ராஜகுமாரன் வீட்டிலிருந்து சிக்கன் எல்லாம் கொடுத்து விடுவார்கள். அவர்களது வீட்டு தோசை ரொம்ப அருமை. அதை சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு சர்க்கரை நோய் வந்தது மிச்சம்! ஒரு முறையாவது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். அந்த வேளையில் என் மகன், ராஜகுமாரனை ‘அங்கிள், அங்கிள்’ என்று அழைப்பான். அப்போது அவர் மிகுந்த உதவி செய்து இருந்தார்.”
இந்த பேட்டியில் விக்ரமன் கூறிய அன்பான, நகைச்சுவை கலந்து கூறிய நினைவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
சமீப காலமாக எதிர்மறை செய்திகளால் மட்டுமே பேசப்பட்ட ராஜகுமாரன் குறித்து, அவரது குருநாதர் அளித்த இந்த நேர்மையான கருத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
English Summary
Devayani husband is the reason why my body is like this Vikraman Open Talk Gurunath himself said this