இன்ஸ்டாகிராமிலிருந்து இயக்குநர் செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கியுள்ள மனைவி; விரைவில் விவாகரத்து..?
Wife removes director Selvaraghavans photos from Instagram
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் செல்வராகவன் மிக முக்கியமானவர். இவருடைய இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் இன்று வரை சிறந்த படங்கள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது, ஜிவி பிரகாஷை நாயகனாக வைத்து 'மெண்டல் மனதில்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்று, கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 03 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி 'மாலை நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், கீதாஞ்சலி தனது கணவர் இயக்குனர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், ''அடுத்த 06 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது'' எனக் கூறியிருந்தார்.
தற்போது அதனையும், இதையையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு விவாகரத்தா..? என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால், செல்வராகவன் தன் மனைவியுடான புகைப்படங்களை எதையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Wife removes director Selvaraghavans photos from Instagram