பிக் பாஸ் தமிழ் 9 – இந்த வாரம் டபுள் எலிமினேஷன்: வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9 Double Elimination this week Do you know who the two contestants who have been eliminated are
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, 60 நாட்களை கடந்த நிலையில், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்தது. சனிக்கிழமையன்று முதலில் ரம்யா ஜோ எலிமினேட்டாகியிருந்தார். அவருக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறத் தயாரானாலும், பின்னர் மன்னிப்பு கேட்டு விளையாட்டில் தொடர்ந்தார். ஆனால் இந்த வாரம் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.
இதே வாரத்தில் இரண்டாவது எலிமினேஷனாக வியானா வெளியேறியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் மிக வலுவான போட்டியாளராக திகழ்ந்த வியானா, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றவர். தனித்துவமான விளையாட்டு, சரியான திட்டமிடல், இனிமையான பேச்சு ஆகியவற்றால் அவர் ஹவுஸ் மேட்ஸிடத்திலும் நல்ல பெயரை பெற்றிருந்தார்.
ஆனால் ஸ்கூல் டாஸ்கின் போது எஃப்ஜே உடன் அதிக நேரம் செலவிட்டதனால், அவர் ‘அவுட் ஆஃப் ஃபோகஸ்’ ஆனார் என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் வியானா நீண்ட நாட்களுக்கு ‘ஒஸ்ட் பிளேயர்’ என்ற குற்றச்சாட்டை சந்தித்தார். விக்ரமனின் வார இறுதி விமர்சனத்திற்குப் பிறகு, எஃப்ஜே – வியானா இடையிலான நெருக்கமும் குறைந்தது. ஆதிரையின் ரீ-என்ட்ரி வந்ததும், வியானா மேலும் அமைதியாக மாறினார்.
இந்நிலையில், 10வது வாரத்தில் வியானா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். முதலில் ரம்யா ஜோ, பின்னர் வியானா என இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன்கள் நடந்துள்ளன. இதனால் வீட்டில் போட்டி சூடு மேலும் உயரும் நிலையில், அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Bigg Boss Tamil 9 Double Elimination this week Do you know who the two contestants who have been eliminated are