2025 டொயோட்டா ஹிலக்ஸ் ANCAP கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திரம் – பாதுகாப்பில் புதிய சாதனை!
2025 Toyota Hilux scores 5 stars in ANCAP crash test a new record in safety
உலகம் முழுவதும் தனது வலிமை, நீடித்த உழைப்பு திறன் மற்றும் நம்பகத்தன்மைக்காக பெயர் பெற்ற டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் டிரக், இப்போது பாதுகாப்புத் திறனிலும் அசத்தி உள்ளது. 2025 மாடல் ஹிலக்ஸ், ஆஸ்திரேலியாவின் ANCAP கிராஷ் டெஸ்டில் சிறப்பான முடிவுகளைப் பெற்று, மிக உயர்ந்த 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
பெரியவர்கள் பாதுகாப்பு சோதனையில் ஹிலக்ஸ் 40ல் 33.96 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முன்பக்க ஆஃப்செட் மோதல், பக்கவாட்டு மோதல், போல் சோதனை, முழு முன்பக்க மோதல், விப்லாஷ் சோதனைகள் என அனைத்திலும் அதன் வலுவான பில்ட் குவாலிட்டி, சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக் அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டதாக ANCAP தெரிவித்துள்ளது. மொத்தத்தில், பெரியவர்களுக்கு 84% பாதுகாப்பு மதிப்பெண் கிடைத்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், 49ல் 44 புள்ளிகளைப் பெற்று 89% பாதுகாப்பு மதிப்பெண் பெற்றுள்ளது. ISOFIX மவுண்ட், குழந்தை இருக்கை பொருத்தும் சரியான வசதிகள் மற்றும் மோதல் நேரங்களில் பாதுகாப்பான கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பயணிகள் பாதுகாப்பு பிரிவிலும் ஹிலக்ஸ் சிறப்பாக செயல்பட்டு 82% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. தானியங்கி அவசர பிரேக்கிங், லேன் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட், டிரைவர் மானிட்டரிங் போன்ற நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இந்த மதிப்பீட்டில் பெரிதும் உதவியுள்ளன.
மொத்தத்தில், 2025 டொயோட்டா ஹிலக்ஸ் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் நம்பகத்தன்மையை சிறப்பாக இணைத்த வலுவான பிக்கப் டிரக் என மீண்டும் நிரூபித்துள்ளது.
English Summary
2025 Toyota Hilux scores 5 stars in ANCAP crash test a new record in safety