ஒருகாலத்தில் வீடு இல்லாமல்… இன்று ஒரே நாளில் இரண்டு கார்! – எம்.எஸ். பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா எமோஷனல்.. குவியும் வாழ்த்து - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்திர நடிகர்களில் ஒருவரான எம்.எஸ். பாஸ்கர், தனது நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகே தகுந்த அங்கீகாரத்தை பெற்றவர். இந்த ஆண்டு பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது பெற்றது, அவரது கலைவாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவிய நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு தற்போது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படத்தில், எம்.எஸ். பாஸ்கர் ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கியிருப்பது காட்டப்பட்டுள்ளது. அதோடு இணைத்து அவர் எழுதிய வரிகள் பலரையும் எமோஷனலாக மாற்றியுள்ளன."வாழ்வதற்கு ஒருகாலத்தில் வீடு கூட இல்லாமல் வறுமையில் வாடினோம். நாளை எங்கே போய் தங்குவது என்று தெரியாத நிலையிலிருந்து, இன்று ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கும் அளவுக்கு வந்திருப்பது சுலபம் அல்ல. கடினமாக உழைத்த அப்பாவுக்கும், பணத்தை சேமித்து சிக்கனமாக நடத்தி வந்த அம்மாவுக்கும் கிடைத்த வெற்றி இது," என தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.

எம்.எஸ். பாஸ்கர் தனது ஆரம்ப காலங்களில் சினிமாவில் சிறிய வேடங்களிலும், பின்னர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பல போராட்டங்கள் செய்தார். பின்னர் சீரியல்கள் மூலம் பிரபலமான அவர், சிறிது நேரத்தில் வெள்ளித் திரைக்கும் தன்னை நிரூபித்தார். எந்த கதாபாத்திரமாயினும் அதை இயல்பாகவே தன் முகபாவனைகளால் உயிர்ப்பீட்டும் திறமை அவரை ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடிக்க வைத்தது.

இப்போது தேசிய விருதும், குடும்பத்தினரின் பெருமையும் இணைந்து பாஸ்கரின் நீண்ட பயணத்துக்கு ஒரு கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. அவரது மகளின் உண்மையான, மனதை தொடும் பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரால் பாராட்டப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Once without a house Today two cars in one day MS Bhaskar daughter Aishwarya is emotional Congratulations are pouring in


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->