உங்கள் உடம்பு எச்சரிக்கிறது: கெட்ட கொலஸ்ட்ரால் அறிகுறிகளை அடையாளம் காணுங்கள்...! - Seithipunal
Seithipunal


உடலுக்கு கொழுப்பு அவசியம், ஆனால் அதனால் அளவு அதிகமாகும் போது அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, எல்.டி.எல் (LDL) எனப்படும் “கெட்ட கொலஸ்ட்ரால்” 100 mg/dL அளவிற்கு மேல் செல்லாதிருத்தல் முக்கியம். இதை மீறினால், மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது சில உடல் உறுப்புகள் எச்சரிக்கையாக “அறிகுறிகள்” வெளிப்படுத்தும். அவற்றை கவனித்தால், முறையான சிகிச்சையுடன் கொழுப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும்.


கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும். இதனால் அந்த பகுதியில் ரத்த ஓட்டம் குறையும். நடக்கும்போது, ஓய்வெடுக்கும்போது கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்பட்டால், அது கொழுப்பின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
மார்பு வலி அல்லது அழுத்தம்
இதய தமனிகளில் கொழுப்பு குவியும்போது மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் உணரப்படும். மார்பில் எரிச்சல், சுருக்கம் போன்றவை மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோய் அறிகுறியாக இருக்கக்கூடும்.
கழுத்து, தாடை மற்றும் தோள்பட்டையில் வலி
கொழுப்பு அதிகரிப்பின் காரணமாக முழு உடலின் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கழுத்து, தாடை, தோள்பட்டைகள் போன்ற பகுதிகளில் வலி, கசக்கம் அல்லது சிரமம் ஏற்படும்.
வேறு எச்சரிக்கை அறிகுறிகள்
கைகள், கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சி
கால்களின் நிறம் மாறி, சில சமயங்களில் நீலச்சிவப்பு தோற்றம்
தலை பாரமாக இருப்பது, தலைசுற்றல், மூச்சுத் திணறல் அல்லது சோர்வு
கண்கள் சுற்றி மஞ்சள் வளையம் தோன்றல்
இவ்வாறான எச்சரிக்கைகள் தெரிந்ததும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். இதனால் நிலைமை மோசமாகாமல் தடுக்கும், உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Your body giving warning Recognize symptoms bad cholesterol


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->