தமிழகத்தின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன...! - தங்கம் தென்னரசு விமர்சனம்
Tamil Nadu demands ignored Thangam Thennarasu criticism
2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88வது பட்ஜெட்டாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள இது, வருங்கால நிதி திசையை முன்னிலைப்படுத்தும் முக்கிய அறிக்கை எனக் குறிப்பிடப்படுகிறது.

தேர்தல் சூழலை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கு சில சிறப்பு திட்டங்கள், புதிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்த்த நிலையில், மாநிலத்திற்கு எந்தப் பிரத்யேக ஒதுக்கீடும் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பதிவில், “2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கு தேவையான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழிற்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளில் எந்த தெளிவான திட்டமும் இல்லை.
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படாதது, மக்கள் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்தது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu demands ignored Thangam Thennarasu criticism