"மீண்டும் நிர்பயா போன்ற சூழல்": நொய்டா பேருந்து சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றம் கடும் கவலை! - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது சிறுமி ஒருவர், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவத்தைத் தாமாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்துத் தனது கடுமையான கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

பொது இடங்களின் பாதுகாப்பற்ற நிலை:

நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்த போது, பொது நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டது. பேருந்துகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் போதிய வெளிச்சமின்மை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் (CCTV) இல்லாத நிலைமை பெண்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை தீவிரமாக்குகிறது. வெறும் அனுதாபங்களை வெளிப்படுத்துவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு விடாது என்றும், இதுபோன்ற குறைபாடுகளுக்கு எதிராக முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

நிர்பயா சம்பவ ஒப்பீடும் சட்ட அமுலாக்கமும்:

கடந்த 2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி 'நிர்பயா' கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, நாட்டில் குற்றவியல் சட்டங்களில் கடுமையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், குற்றவாளிகள் எவ்வித சட்ட அச்சமுமின்றி மீண்டும் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நாடு மீண்டும் 'நிர்பயா' காலகட்டத்தைச் போன்றதொரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கி நகர்கிறது என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்த உச்ச நீதிமன்றம், பெண்களின் பாதுகாப்பில் எங்கு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஆழமாக ஆராய்ந்து, பாதுகாப்பு தரநிலைகளைக் கண்டிப்பாகச் செயல்படுத்த தேவையான மேலதிக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court Compares Noida Bus Gang-Rape to 2012 Nirbhaya Case Slams Authorities Over Women Safety Failure


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->