கண்ணீர் விட்டு அழுத அஜித் மகன் ஆத்விக்..கட்டிபிடிச்சு தைரியம் சொன்ன அஜித்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Ajith son Aathvik cried in tears Ajith hugged him and expressed his courage Fans were moved
ஆசிய அளவிலான கார் ரேஸ் போட்டியான Asian Le Mans Series–ல் தீவிரமாக பங்கேற்று வருகிறார் நடிகர் அஜித். டிசம்பர் 14ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற பந்தயத்தை காண அங்குள்ள தமிழர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அஜித்தை கண்ணுக்குப் பக்கத்தில் காண ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வீடியோக்களில், ரசிகர்களை எமோஷனலாக ஆக்கிய காட்சி ஒன்று பெரும் வைரலாகியுள்ளது. ரேஸுக்கு முன் அஜித்தைச் சந்தித்த அவரது மனைவி ஷாலினியும், மகன் ஆத்விக்கும் வாழ்த்துகள் கூறினர். அப்போது தந்தையை பார்த்தவுடன் ஆத்விக் திடீரென அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். மகனை அணைத்தபடி, “அழக்கூடாது” என்று அமைதியாக ஆறுதல் கூறும் அஜித்தின் அந்த தருணம் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
இதற்கு முன்பு, ரசிகர்களை நோக்கி கை அசைத்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கிய அஜித்தின் வீடியோவும் வைரலானது. மேலும், ஷாலினிக்கு அஜித் கொடுத்த பாசமான முத்தத்தையும் ரசிகர்கள் பெரிதும் பகிர்ந்து கொண்டனர்.
அஜித் குமார் ரேஸிங் அணியும், இந்தியாவின் முன்னணி ரேஸராகிய நரைன் கார்த்திகேயனின் அணியும் இணைந்து பங்கேற்கும் இந்த ஆசியன் லீ மென்ஸ் சீரிஸ் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதில் அஜித்–ஆத்விக் இடையிலான அந்த அன்பான தருணமே இணையம் முழுவதும் இதயத்தை உருகச் செய்து வருகின்றது.
English Summary
Ajith son Aathvik cried in tears Ajith hugged him and expressed his courage Fans were moved