Formula 1 தரத்தில் கோவை டிராக்...! -அஜித் மற்றும் நரேன் சந்திப்பு வைரல்...!
Coimbatore track at Formula 1 level Ajith and Narains meeting goes viral
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 111 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட மைதானம், தற்போது இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்மைதானத்தில் 3.8 கிலோமீட்டர் நீளத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட கார் பந்தய டிராக் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இனி கோவை நகரம் itself ஒரு Formula 1 – Racing Hub ஆக மாறும் என நிபுணர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.இந்த மைதானம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தரங்கள், பிரேக்கிங் மண்டலங்கள், ஹைஸ்பீடு டர்ன்ஸ் ஆகியவற்றுடன் மிகுந்த நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் Formula 1, Moto GP, மற்றும் National Racing Championships போன்ற முக்கிய பந்தயங்களை கோவையில் நடத்தும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.இந்தச் சூழலில், நடிகரும், திறமையான கார் பந்தய வீரருமான அஜித் குமார் நேற்று கருமத்தம்பட்டி சர்வதேச ரேஸிங் மைதானத்துக்கு விஜயம் செய்தார்.
அங்கு அவர் மைதானத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஆர்வமுடன் பார்வையிட்டார்.பின்னர், இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் அவரைச் சந்தித்தார். இருவரும் சில நிமிடங்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸ், இந்திய ரேசிங் எதிர்காலம், மற்றும் புதிய டிராக் வடிவமைப்பு குறித்து ஆர்வமுடன் கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, அஜித் குமார் அங்கிருந்த Go-Karting Race Car ஒன்றை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டார். வேகமும், கட்டுப்பாட்டும் கலந்த அவரது டிரைவிங் ஸ்டைல் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.மேலும், தற்போது, அஜித் – நரேன் சந்திப்பு மற்றும் அஜித் கார் ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. ரசிகர்கள் “Thala Ajith in Racing Mode again!” என்று கமெண்ட் செய்து வைரல் ஆக்கியுள்ளனர்.
English Summary
Coimbatore track at Formula 1 level Ajith and Narains meeting goes viral