பௌர்ணமி அன்னாபிஷேகம்: திருவண்ணாமலை கோயிலில் நவம்பர் 04-ஆம் தேதி நடையடைப்பு..!
Blockade at Tiruvannamalai temple on November 4th
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வரும் நவம்பர் 04-ஆம் தேதி பிற்பகல் 03 மணி முதல் மாலை 06 மணி வரை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோயிலில் எதிர்வரும் நவம்பர் 04-ஆம் தேதி மற்றும் நவம்பர் 05-ஆம் தேதி ஆகிய நாட்களில் பௌர்ணமி வரவிருப்பதாலும், நவம்பர் 04-ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதாலும், அன்று பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 06.00 மணிவரையில் நடைசாற்றப்பட்டு மீண்டும் மாலை 06.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பாக்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் நவம்பர் 04-ஆம் தேதி, நவம்பர் 05-ஆம் தேதி ஆகிய இரண்டு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Blockade at Tiruvannamalai temple on November 4th