அதிசய 11 ரூபாய் பரிகாரம்...!கடன் தீர்க்கும் பக்தி நிறைந்த வழி!
miraculous 11 rupee remedy devotional way to pay off debt
கடனை அடைப்பதற்குரிய பணவரவை மேற்கொள்ள வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் கடனை அடைப்பதற்குரிய பணவரவை மேற்கொள்ள இயலவில்லை, என்பவர்கள் ஆடிச் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும். விரைவில் கடன் தீருவதற்குரிய பண வரவு உண்டாகும்.

கடன் தீர பரிகாரம்:
கடன் பிரச்சினைக்கு உரிய கிரகங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் செவ்வாய் பகவான். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக தான் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக முருகப்பெருமான் திகழ்கிறார். அதனால் நாம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது கடன் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நமக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையிலோ அல்லது குளிகை நேரத்திலோ வாங்கிய கடனுக்குரிய வட்டியையோ அல்லது அசல் தொகையையோ திருப்பி செலுத்தும் பொழுது விரைவிலேயே கடன் தீரும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்களும் பல இருக்கின்றன.
இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை இரவில் செய்ய வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு படுத்து உறங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு 11 ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அதேபோல் ஒரு கண்ணாடி டம்ளர் வேண்டும். கண்ணாடி டம்ளர் இல்லை என்பவர்கள் கண்ணாடி பாட்டிலை உபயோகப்படுத்தலாம். கண்டிப்பான முறையில் கண்ணாடியை தான் உபயோகப்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக், எவர்சில்வர் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக உங்களுக்கு பிடித்தமான முருகப்பெருமானை மனதார நினைத்து உங்களை நம்பி இந்த பரிகாரத்தை செய்கிறேன் விரைவிலேயே உங்களின் அருளால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்ததில் இருந்து முடிக்கும் வரை முருகனின் திருநாமத்தை கூறிக் கொண்டே செய்ய வேண்டும்.
முருகா முருகா என்று கூறினால் கூட போதும்.ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் குடிக்கின்ற சுத்தமான நீரை முக்கால் டம்ளர் அளவிற்கு ஊற்ற வேண்டும். இதனுடன் இரண்டு மூடி அளவு பன்னீரை ஊற்ற வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது 11 ஒரு ரூபாய் நாணயங்களை சுத்தமாக கழுவி ஒவ்வொன்றாக அந்த தண்ணீருக்குள் போட வேண்டும்.
பிறகு சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி அந்த தண்ணீரின் மேல் சேர்த்து விடுங்கள். இந்த தண்ணீரை உங்களுடைய வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.தென்மேற்கு மூலையில் வைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு மூலையில் தரையில் வைக்க வேண்டும். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் இதில் இருக்கக்கூடிய 11 ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாக முடிந்து முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விட வேண்டும். தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
English Summary
miraculous 11 rupee remedy devotional way to pay off debt