மோடி என் வழிகாட்டி…! பா.ஜ.கவிலிருந்து பிரிவது கனவில் கூட சாத்தியமில்லை...!- சிராக் பாஸ்வான் உறுதி
Modi is my guide Breaking away from BJP not even possible my dreams Chirag Paswan assures
பீகார் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.அப்போது அவர் தெரிவித்ததாவது,"எனது பெற்றோருக்குப் பிறகு நான் மிகவும் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் நரேந்திர மோடி.

அவரிடம் எனக்குள்ள மரியாதையும் பாசமும் அளவிட முடியாதது. மோடி இருக்கும் வரை, பா.ஜ.கவிலிருந்து பிரிவது பற்றி நான் கனவிலும் நினைக்க மாட்டேன்".மேலும் அவர்,“நான் எதிரிகளின் நடவடிக்கைகளில் நேரம் வீணடிக்க மாட்டேன். எனது இலக்கு என் பலத்தை மேம்படுத்துவது மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னேறுவதுதான்.
இந்தத் தேர்தலில் நாங்கள் 100% வெற்றி விகிதத்தை பதிவு செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது".பீகாரில் தற்போது 5 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியைப் பற்றி அவர்,“இது வெற்றிகரமான கூட்டணி. ஜனதா தளம் (ஐக்கிய) தங்களது வாக்காளர் தளத்தை விரிவுபடுத்தி வருகிறது.
எங்களின் நோக்கம் ஒரே ஒன்று. வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு உருவாக வேண்டும்” என வலியுறுத்தினார்.தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் அரசியல் மரபை பற்றி சிராக் பாஸ்வான் கூறுகையில்,“என் தந்தை எப்போதும் மக்களுக்காக, தனது மண்ணுக்காக உழைத்தவர். அவரைப் போல் நானும் மக்கள் நலனுக்காக நேர்மையாக செயல்பட முயற்சி செய்கிறேன்” என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
English Summary
Modi is my guide Breaking away from BJP not even possible my dreams Chirag Paswan assures